சென்னை: கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு பாஜக விளையாட்டு பிரிவு சார்பில் நயினார் பாலாஜி ஒரு லட்சம் ரொக்கம் வழங்கி பாராட்டினார்.பஹ்ரைனில் நடைபெற்ற 3-வது ஆசிய இளையோர் தொடர் கபடி போட்டியில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றது. இப்போட்டியில் இந்தியா வெற்றி பெற சென்னை கண்ணகி நகரை சேர்ந்த வீராங்கனை கார்த்திகா முக்கிய காரணமாக திகழ்ந்தார். கார்த்திகாவை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் பாஜக விளையாட்டுப் பிரிவு சார்பில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மகனான விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் நயினார் பாலாஜி கண்ணகி நகருக்கு நேரில் சென்று கார்த்திகாவை பாராட்டினார். அப்போது கபடி பயிற்சியாளர் ராஜி வீட்டிற்கு சென்ற பாஜக விளையாட்டு பிரிவு மாநில தலைவர் நயினார் பாலாஜி, தங்கம் வென்ற கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு ஒரு லட்சம் ரொக்கம் மற்றும் எலெக்ட்ரிக்கல் ஸ்கூட்டர் வழங்கி பாராட்டினார். பின்னர் கார்த்திகா விளையாடிய கபடி அணி கேப்டன் சுஜிக்கு 50 ஆயிரம் ரொக்கமும், மற்றும் பயிற்சியாளர் ராஜிக்கு ஸ்மார்ட் வாட்ச் வழங்கியும் பாராட்டினார்.
Be the first to comment