நீலகிரி: நூற்றாண்டு பழமை வாய்ந்த குன்னூர் ரயில் நிலையத்தை அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.6 கோடியே 7 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை உள்ள நீலகிரி மலை ரயில் பாதை 1899-ம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் ஆட்சியில் அமைக்கப்பட்டது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த ரயில் நிலையம் தற்போது பழமை மாறாமல் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.6 கோடியே 7 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.இதில், ரயில் நிலைய நுழைவாயில், சுவர் ஓவியங்கள், செல்பி ஸ்பாட், வாகன நிறுத்துமிடம் போன்ற வசதியுடன் நீலகிரி மாவட்டத்தின் இயற்கை சூழலில் அமைக்கபட்டு வருகிறது. பறவை, வன விலங்குகளின் ஓவியங்களால் வனவிலங்குகள் சரணாலயம் போன்று குன்னூர் மலை ரயில் நிலையம் ரம்மியமாக காட்சி அளிப்பதாக சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும் நீலகிரி மலையில் பயணத்தின் போது இது போன்ற வனவிலங்குகள் நேரடியாக பார்க்க முடிகிறது என்றும் குன்னூர் ரயில் நிலையத்தை பார்வையிடும் பொழுது வனவிலங்கு சரணாலயத்தில் செல்வது போன்ற நினைவுகள் ஏற்படுவதாக சுற்றுலா பணிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர்.
Be the first to comment