காஞ்சிபுரம்: சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் பங்கேற்று, அவர் தலைமையில் பாலியல் சமத்துவ உறுதி மொழி ஏற்கப்பட்டது. பின்னர், விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து துவங்கிய இப்பேரணியானது காவலான் கேட், மேட்டுத் தெரு, வள்ளல் பச்சையப்பன் தெரு, மூங்கில் மண்டபம் வரை சென்று முடிவுற்றது. பேரணியில் 100க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழுவை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு பதாகைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பியவாறு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், மகளிர் திட்ட இயக்குனர் பிச்சாண்டி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் என பலர் கலந்துக் கொண்டனர்.
Be the first to comment