Skip to playerSkip to main content
  • 2 days ago
கோயம்புத்தூர்: ஊட்டி, கொடைக்கானலை தொடர்ந்து பொள்ளாச்சியில் உள்ள முக்கிய சுற்றுலா தலமான வால்பாறைக்கு செல்லும் அனைத்து பயணிகளின் வாகனங்களுக்கும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இ-பாஸ் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.பொள்ளாச்சியில் இருந்து ஆழியார் வழியாக வால்பாறைக்கு செல்லும் பிரதான சாலை 40 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட அடர்ந்த வனப் பகுதியில் அமைந்துள்ளது. மேலும் இங்கு ஆழியார் வனத் துறை சோதனைச் சாவடி அமைந்துள்ளது. எனவே இவ்வழியாக வால்பாறை மற்றும் குரங்கருவி எனப்படும் கவியருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களுக்கு இ-பாஸ் வாகன தணிக்கை செய்யப்பட்ட பின்னரே அனுமதித்து வருகின்றனர்.சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் அங்கு அமைக்கப்பட்டுள்ள இ-பாஸ் சோதனை மையத்தில், இ-பாஸ் எடுத்த பின்பே அனுமதிக்கப்படுகிறது. அதே நேரத்தில் அரசு பேருந்துகளில் வரும் சுற்றுலாப் பயணிகள் வழக்கம் போல பயணம் செய்து வருகின்றனர்.மேலும் வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களில் நெகிழிப் பை மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்கள் வைத்திருந்தால் அதனை வனத் துறையினர் பறிமுதல் செய்து அவர்களை அனுமதிக்கின்றனர். மேலும் வனச் சாலையில் பயணம் செய்யும் சுற்றுலா பயணிகள் குரங்கு, வரையாடு உள்ளிட்ட வன விலங்குகளை கண்டால் அவைகளுக்கு உணவு கொடுத்து, தொந்தரவு செய்யக்கூடாது எனவும் எச்சரித்து அனுப்புகின்றனர்.

Category

🗞
News
Be the first to comment
Add your comment

Recommended