சென்னை: வீட்டில் வளர்க்கக்கூடிய நாய்களுக்கு அரசிடம் சான்றிதழ் பெறுவதற்கு ஓஎம்ஆர் சாலையில் உள்ள அலுவலகத்திற்கு பொதுமக்கள் அதிக அளவில் வருகை தந்தனர்.வீட்டில் வளர்க்கக்கூடிய வளர்ப்பு நாய்களுக்கு அரசு சான்றிதழ் பெற வேண்டும் என அரசு அறிவுறுத்திய நிலையில், இன்று அதிகாலை 4 மணி முதலே ஓஎம்ஆர் சாலை சோழிங்கநல்லூரில் உள்ள வளர்ப்பு நாய்களுக்கு சான்றிதழ் வழங்கக்கூடிய அலுவலகத்திற்கு வளர்ப்பு நாய்களுடன் பொதுமக்கள் வந்தனர். அங்கு வளர்ப்பு நாய்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.வார விடுமுறை நாட்கள் என்பதால் அதிக அளவில் பொதுமக்கள் தங்களின் விதவிதமான வளர்ப்பு நாய்களுடன் சான்றிதழ் பெற குவிந்ததால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.நாய்களுக்கான சுகாதாரச் சான்றிதழ் என்றால் என்ன?நாய்களுக்கான சுகாதார சான்றிதழ் என்பது உரிமம் பெற்ற கால்நடை மருத்துவரால் வழங்கப்படும் அதிகாரப்பூர்வ ஆவணமாகும். இது நாய்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் முக்கிய ஆவணமாக இருக்கிறது. இதில் தடுப்பூசி பதிவுகள், நாயின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும். இந்நிலையில், விதவிதமான நாய்களை கண்ட அப்பகுதி பொதுமக்கள் நாய்களை புகைப்படம் எடுத்தனர்.
Be the first to comment