தஞ்சாவூர்: மாட்டுப் பொங்கலை முன்னிட்டு கும்பகோணம் பெரியார் மீன் அங்காடியில், பொதுமக்கள் அதிக அளவில் இன்று மீன் வாங்க குவிந்தனர். மாட்டுப் பொங்கலையொட்டி அசைவ உணவுகளை மக்கள் அதிகளவில் வாங்கி சமைப்பது வழக்கம். அந்த வகையில் கும்பகோணம் பெரியார் மீன் அங்காடியில் மீன் வாங்குவதற்காக அதிகாலை முதல் ஏராளமானோர் குவிந்தனர். மேலும், கும்பகோணம் மீன் மார்க்கெட்டில் கர்நாடகா மற்றும் ஆந்திர மாநில கடற்கரை பகுதிகளில் இருந்து வந்திருந்த பல வகை மீன்கள் விற்பனைக்காக அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தன. மேலும், கும்பகோணத்தை ஒட்டி உள்ள பகுதிகளில் உள்ள குளங்களில் இன்று மீன்கள் பிடித்து இங்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. மீன் சந்தையில் திருவிழா போல் மீன்கள் வாங்க மக்கள் கூட்டம் அலை மோதியது. அங்கு இட பற்றாக்குறை காரணமாக மீன்கள் பாதுகாப்பற்ற நிலையில் தரையில் போட்டு விற்கப்பட்டது. உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பாதுகாப்பான வகையில் மீன்களை விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Be the first to comment