ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பகுதிகளில் உள்ள சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் அவ்வப்போது புலி, மான், கரடி உள்ளிட்ட வனவிலங்கள் புகுவது தொடர் கதையாக இருந்து வருகிறது. அதில் ஆசனூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் சற்று அதிகமாகவே உள்ளது. இந்த நிலையில் ஆசனூருக்கு அருகே உள்ள திம்பம் மலைப் பாதையிலும் அடிக்கடி சிறுத்தைகள் கடப்பதாக வாகன ஓட்டிகள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்திருந்த நிலையில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் திம்பம் மலைப்பாதை வழியாக செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்றிரவு தாளவாடியில் இருந்து காரில் வந்த இளைஞர்கள் சத்தியமங்கலம் நோக்கி திம்பம் 27வது கொண்டை ஊசி வளைவுக்கு அருகே சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது சாலையோர தடுப்புச் சுவரில் சிறுத்தை ஒன்று அமர்ந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து அவர்கள் காரில் இருந்தபடியே சிறுத்தை அமர்ந்திருப்பதை தங்களது செல்போனில் படம் பிடித்தனர். அந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைலராகி வருகிறது. சிறிது நேரம் அங்கும் இங்குமாக சாலையோரம் நடமாடிய சிறுத்தை, அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. வனத்துறையினர் வாகன ஓட்டிகள் விலங்குகளை பார்த்த வானங்களைவிட்டு கீழே இறங்க வேண்டாம் என கேட்டுக் கொண்டனர்.
Be the first to comment