திண்டுக்கல்: கொடைக்கானலில் உள்ள பிரையன்ட் பூங்காவில் திடீரென காட்டெருமைகள் புகுந்ததால் அங்கிருந்த சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓடினர். தற்போது இதுகுறித்த வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சர்வதேச சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. விடுமுறை நாட்களில் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அவ்வாறு, இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பிரையன்ட் பூங்காவிற்கு சென்று தங்களுக்கான நேரத்தை செலவழித்து வருகின்றனர். ஆனால், சமீப காலங்களில் இந்த பூங்காவிற்குள் காட்டெருமைகள் புகுந்து அங்குள்ள செடிகளை சேதப்படுத்தும் சம்பவங்கள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.இந்த நிலையில், நேற்று பூங்காவிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்திருந்தனர். அப்போது, திடீரென காட்டெருமைகள் பூங்காவிற்குள் புகுந்ததால் சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓடி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர். தற்போது இது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது. பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Be the first to comment