Skip to playerSkip to main contentSkip to footer
  • 5 months ago
ஆவடி, சென்னை: திருவள்ளூர் மாவட்டம் ஆவடியிலிருந்து பூந்தமல்லி நோக்கிச் செல்லும் ஒருவழிப் பாதையில் ஒரு ஆட்டோவில் அதன் ஓட்டுநர் கார்த்திக் மற்றும் அவருடன் முரளி சென்று கொண்டிருந்தனர். அப்போது, திடீரென கார்த்திக் திடீரென ஒருவழிச் சாலையின் மறுபுறத்துக்கு இடையே உள்ள பிரிவுக்குள் நுழைந்து சென்றுள்ளார்.அப்போது, அந்த சாலையின் எதிர்த் திசையில் அரசு தாழ்தள சொகுசு பேருந்து ஒன்று வந்தது. அதைப் பார்த்த ஆட்டோ ஓட்டுநர் வாகனத்தை நிறுத்த முற்பட்ட போது, ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாகச் சுழன்று சென்றுள்ளது. அப்போது வேகமாக வந்த அரசு தாழ்தள சொகுசுப் பேருந்து ஆட்டோ மீது மோதி எதிர்த் திசையில் தூக்கி வீசப்பட்டு விபத்துக்குள்ளானது.இந்த விபத்து சம்பவத்தைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் படுகாயமடைந்த நிலையிலிருந்த ஆட்டோ ஓட்டுநர் மற்றும் பயணி இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த விபத்து குறித்து ஆவடி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Category

🗞
News
Be the first to comment
Add your comment

Recommended