சென்னை: தொடர் கனமழையால் சென்னை மதுரவாயல் தரைப்பாலத்தில் வெள்ள நீர் சூழ்ந்துள்ள நிலையில் அதை மாணவர்கள் ஆபத்தான வகையில் கடந்து செல்லும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வங்கக்கடலில் உருவாகியுள்ள 'மோந்தா’ புயல் காரணமாக சென்னை மற்றும் ஆந்திர கடற்கரை பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, சென்னையில் உள்ள நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. குறிப்பாக, சென்னை மதுரவாயலில் உள்ள கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள தரைப்பாலத்தின் மீதும் தண்ணீர் ஓடுகிறது. பாதுகாப்புக்காக தரைப்பாலத்தின் இருபுறங்களிலும் இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த தரைப்பாலம் வழியாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் செல்வது வழக்கம். சாலை வழியாக சென்றால் நீண்டநேரம் ஆகும் என்பதால், பெரும்பாலனோர் இந்த தரைப்பாலம் வழியாக செல்வது வழக்கம். ஆனால், தற்போது தரைப்பாலம் வெள்ள நீர் சூழந்த மோசமான நிலையில் உள்ளது. இருப்பினும், மாணவர்கள் அதே வழியாக வெள்ள நீரை ஆபத்தான முறையில் கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் பேசுகையில், “மாணவர்கள் வெள்ள நீரில் ஆபத்தான முறையில் பாலத்தின் மீது செல்கின்றனர். இதனை பாதுகாப்பு பணியில் உள்ள போலீசார் கண்காணித்து வெளியேற்றி வருகின்றனர். வேறு வழியாக செல்ல மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றனர்.
Be the first to comment