திண்டுக்கல்: இருசக்கர வாகனம் மீது லாரி உரசியதால் வாகனத்தில் சென்ற நபர் நிலைதடுமாறி கீழே விழுந்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் மாவட்டம், நத்தம் நகர் பகுதியில் சாலையின் இரு புறங்களிலும் தொடர்ந்து வாகனங்கள் நிறுத்தப்படுவதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக மக்கள் குற்றச்சாட்டுகின்றனர். இந்த நிலையில், நத்தத்திலிருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் மீனாட்சிபுரம் அருகே சாலையின் மையப் பகுதியில் மினி வேன் ஒன்று நின்று கொண்டிருந்தது.அப்போது நத்தம் காமராஜ் நகரை சேர்ந்த செல்வகுமார் தனது இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த ராஜஸ்தான் மாநில பதிவெண் கொண்ட லாரி, வாகனத்தை முந்திச்செல்லும் போது, செல்வக்குமார் பைக் மற்றும் அவருக்கு பின்னால் வந்த மற்றொரு பைக் மீது உரசியது. இதில், செல்வகுமார் நிலை தடுமாறி கீழே விழுந்து, லாரிக்கும் மினி வேனுக்கும் இடையே சிக்கிக் கொண்டார்.இதில், அவர் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், அவரது இரு சக்கர வாகனம் கீழே விழுந்ததில் முற்றிலும் சேதமடைந்தது. தற்போது இதுகுறித்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Be the first to comment