திருப்பத்தூர்: ஆம்பூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவியதால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரிய விட்டபடி சென்றனர்.திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வந்தது. இந்நிலையில், தற்போது ஆம்பூர் மற்றும் ஆலாங்குப்பம், பெரியாங்குப்பம், விண்ணமங்கலம், அய்யனூர், கன்னடிகுப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாதபடி பனிப்பொழிவு இருப்பதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர். மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரை இல்லாமல், இந்த ஆண்டு முதன்முறையாக அதிகளவு பனிப்பொழிவு காணப்பட்டதால், பொதுமக்கள் அதனை ரசித்தனர்.தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கி மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வந்தது. இதனிடையே இரவு நேரங்களில் பனிப்பொழியும் இருந்து வருகிறது. பொதுவாக தமிழ்நாட்டில் டிசம்பர் மாதம் பனிக்காலம் தொடங்கும் நிலையில், தற்போது முன்னதாகவே நவம்பர் மாதத்தில் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Be the first to comment