நீலகிரி: சமீப காலமாக நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குள் காட்டு யானை புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதிலும் தற்போது பலாப்பழ சீசன் துவங்கி உள்ளதால் சமவெளி பகுதியில் இருந்து கூட்டம் கூட்டமாக காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும், விவசாய நிலங்களுக்கும் படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில் கூடலூர் கலைவாணி பள்ளி அருகே சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவிற்கு உள்ள இஞ்சி தோட்டத்துக்குள் இன்று காலை காட்டு யானை ஒன்று புகுந்துள்ளது. விவசாய நிலத்தில் ஹாயாக நடந்த அந்த காட்டு யானை அருகில் இருந்த வாழை தோப்பை பார்த்ததும் உற்சாகத்துடன் ஓட தொடங்கியது. இது தொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து இது குறித்து பேசிய பொதுமக்கள், “ஏற்கனவே பலமுறை யானை நடமாட்டம் குறித்து வனத்துறையிடம் புகாரளித்தும், நடவடிக்கை இல்லை. ஒவ்வொரு நாளும் நாங்கள் பயத்துடன் வாழ்ந்து வருகிறோம். தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, யானையை காட்டுக்குள் விரட்ட வேண்டும்” என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
Be the first to comment