கோயம்புத்தூர்: வால்பாறை அருகே உள்ள தனியார் எஸ்டேட்டில் ஒற்றைக் காட்டு யானை மரத்தை தள்ளும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட பகுதியாகும். இங்கு 56 தனியார் எஸ்டேட்டுகள் மற்றும் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாகும். மேலும், இங்கு சுமார் ஒரு லட்சத்திற்கு மேலான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பெரும்பாலும் தனியாருக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட்களில் தேயிலை பறிக்கும் பணியில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.தற்போது பனி காலம் தொடங்கி உள்ளதால் கேரளா வனப்பகுதியில் இருந்து ஏராளமான காட்டு யானைகள் கூட்டம் கூட்டம் வருகிறது. இந்நிலையில் ரொட்டிக்கடை அருகே உள்ள சவரிக்காடு எஸ்டேட்டுக்கு சொந்தமான பகுதியில் ஒற்றைக் காட்டு யானை தேயிலைத் தோட்ட பகுதியில் உலா வருகிறது. இதனால் தேயிலை பறிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தங்களுக்கு அச்சமாக உள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.இதனால், வனத் துறையினர் உத்தரவின்பேரில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக சாலை கடக்குமாறு இரவு நேரங்களில் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். மேலும், தேயிலை எஸ்டேட்டில் ஒற்றைக் காட்டு யானை மரத்தை தள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Be the first to comment