செங்கல்பட்டு: கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு கேக்குகள் தயாரிக்கும் பணிக்கான மூலக்கூறு தயாரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் வருகிற டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு அதிகப்படியான கேக்குகள் தயாரிக்கும் பணிக்கான மூலக்கூறு தயாரிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் உலர்த்தப்பட்ட திராட்சை, பாதாம், பிஸ்தா, முந்திரி, அத்திப்பழம், உயர்தர மதுபானங்கள் உள்ளிட்ட பல வகையான பொருட்களை ஊற்றி கலக்கப்பட்டு அதனை 30 நாட்களுக்கு பதப்படுத்தப்படவுள்ளன. பிறகு அதை 30 நாள் கழித்து பதப்படுத்தப்பட்ட மூலக்கூறு பொருட்களை வைத்து கிறிஸ்துமஸ் தினத்திற்கு கேக் தயாரிக்கும் பணி நடைபெறும். மேலும், 120 கிலோ எடை கொண்ட இந்த மூலப் பொருட்களை வைத்து சுமார் 2000 கிலோ கேக் தயாரிக்கலாம் என கூறப்படுகிறது. நிகழ்ச்சியில் ஏராளமான வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் கேக் மூலக்கூறு பொருள் தயாரிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.அதனைத் தொடர்ந்து, அந்த நட்சத்திர விடுதியில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு தேங்காய் மட்டையை வைத்து இயற்கையான முறையில் கிறிஸ்துமஸ் மரம் உருவாக்கப்பட்டது.
Be the first to comment