தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடிகர் கௌதம் கார்த்திக் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது அவருடன் பக்தர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார்.முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். திருச்செந்தூர் கோயிலில் அண்மையில் நடந்த குடமுழுக்கு விழாவிற்கு பிறகு இங்கு சினிமா நட்சத்திரங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வருகை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நடிகர் கௌதம் கார்த்திக் முருகனை தரிசனம் செய்ய இன்று வருகை தந்தார். கோயிலுக்குள் சென்ற அவர் முருகன், வள்ளி, தெய்வானை, சத்ரு சம்ஹார மூர்த்தி, தட்சிணாமூர்த்தி, பெருமாள் என அனைத்து சன்னதிகளிலும் தரிசனம் செய்தார்.வெளியே வந்த நடிகர் கௌதம் கார்த்திக் உடன் கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். இதற்கிடையே கோயிலில் இருந்து வெளியே வந்த நடிகர் கௌதம் கார்த்திக் காமெடி நடிகர் யோகிபாபுவுடன் வீடியோ காலில் பேசி மகிழ்ந்தார்.
Comments