நீலகிரி: கனமழையால் மலைப்பாதையில் ஏற்பட்ட திடீர் மண் சரிவால் சுமார் மூன்று மணி நேரம் ஊட்டி மலை ரயில் சேவை பாதிக்கப்பட்டது.நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், பகல் மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மேட்டுப்பாளையம்-குன்னூர் மலை ரயில் பாதையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. மேலும், ரயில் தண்டவாளத்தில் பாறைகள் விழுந்தன. இதனால், இன்று மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையிலான மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.குன்னூர்- ஊட்டி இடையே மலை ரயில் சேவை வழக்கம்போல் இயங்கியது. இதனிடையே, அருவங்காடு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் ரயில் தண்டவாளத்தில் விழுந்ததால், வெல்லிங்டன் ரயில் நிலையத்தில் மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, 50க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் ரயில் பாதை சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். இதனால் மூன்று மணி நேரம் தாமதத்திற்கு பிறகு மலை ரயில் புறப்பட்டு சென்றது.
Be the first to comment