Skip to playerSkip to main content
  • 3 hours ago
அரியலூர்: வடிக்கால், வாய்க்கால் தூர்வாரப்படாததால் 2000 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமாகியுள்ளன.அரியலூர் மாவட்டம் தா.பழூர் பகுதி டெல்டா பாசன பகுதியாக விளங்கி வருகிறது. இதில் இரண்டாம் எண் ரங்கராஜன் கால்வாய் பாசன வாய்க்காலாகவும், அதே நேரத்தில் மழைக்காலங்களில் வடிகால் வாய்க்காலாகவும் பயன்பட்டு வருகிறது. இந்த வாய்க்கால் புதர் மண்டி நீண்ட நாட்களாக தூர்வாரப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை காரணமாக இரண்டு நாட்களாக அப்பகுதியில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சுமார் 2000 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலத்தில் மழை நீர் தேங்கி, நெற்பயிர்கள் மூழ்கின. வடிகால் வாய்க்கால் புதர் மண்டி கிடப்பதால் உடனடியாக மழை நீர் வடியாமல் சம்பா நெற்பயிர் அழிந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.மழைக்காலங்களில் அபாயம் ஏற்படும் என தொடர்ந்து வாய்க்காலை தூர்வாரும்படி அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தும், முறையான நடவடிக்கை எடுக்கப்படாததே இந்த நிலைக்கு காரணம் என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். மேலும், உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுத்து, உரிய தீர்வு காண வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Category

🗞
News
Transcript
00:02How did it go?
00:07It's gone.
00:09It's gone.
00:13It's gone.
00:15I'm gone.
00:17Where did it go?
00:21Where did it go?
00:22I'm going to go.
00:24You're going to go.
00:26I'm going to go.
00:29I'm gone.
00:30I'm going to go.
00:40It's gone.
00:41I can't go.
00:44I'm going to go.
00:47He's gone.
00:48He's gone.
00:52Itemendo?
00:58Can you chew it with a littlebit?
01:01For you to be alone?

Recommended