காஞ்சிபுரம்: பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஸ்ரீ வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோயிலில் நடிகை ராதா சாமி தரிசனம் செய்தார். அவரைக் காண பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு குவிந்ததால் கோவில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.நீதிமன்ற வழக்குகள் மற்றும் நீண்டகாலப் பிரச்சனைகளில் வெற்றி பெற பக்தர்கள் வழிபடும் கோயிலாக ஸ்ரீ வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோயில் திகழ்கிறது. நடிகை ராதாவுக்கும் அவரது சகோதரியும், நடிகையுமான அம்பிகாவுக்கும் இடையே சொத்துப் பிரச்சினை நிலவி வருவதாகக் கூறப்படுகிறது.இந்நிலையில் நடிகை ராதா இக்கோயிலுக்கு வருகை தந்திருந்தார். ஆனால், அவர் சொத்துப் பிரச்சினை தொடர்பாகவே கோயிலுக்கு வந்தாரா என்பது குறித்த தகவல்கள் தெரியவில்லை.நடிகை ராதா சாமி தரிசனம் செய்த பிறகு கோயிலில் உள்ள செயல் அலுவலர் அலுவலகத்தின் உள்ளே இருந்தார். அப்போது, அவரை பார்ப்பதற்காக பொதுமக்கள் அலுவலக நுழைவாயிலில் இருந்த கண்ணாடி வழியாக பார்க்க முயன்றனர். இதற்காக பக்தர்கள் முந்திக்கொண்டு போட்டிப் போட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது.நடிகையைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அங்கிருந்த சிலர் முண்டியடித்த சம்பவம், அங்கிருந்த மற்ற பக்தர்களிடையே முகச்சுளிப்பை ஏற்படுத்தியது.