வேலூர்: திருமண மண்டபத்தில், இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் எரிவாயு சிலிண்டரை திருடிச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சேண்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்திற்கு, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். அவர் யாரோ ஒருவருடன் செல்போனில் பேசிக் கொண்டே இயல்பாக மண்டபத்திற்குள் நுழைந்துள்ளார். எவ்வித சந்தேகத்திற்கும் இடமளிக்காத வகையில் நடந்து கொண்ட அந்த நபர், தனது பேச்சைத் தொடர்ந்தபடியே அங்கிருந்த எரிவாயு சிலிண்டரை லாவகமாக எடுத்துத் தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றி, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.திருமண மண்டப உரிமையாளர்கள் பின்னர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, அந்த நபரின் முகம் மிகத் தெளிவாகப் பதிவாகியிருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக, திருமண மண்டப நிர்வாகம் சார்பில் வேலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், அந்த மர்ம நபரை அடையாளம் கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Comments