சென்னை: பொங்கல் கொண்டாட்டத்தில் பங்கேற்ற தமிழக பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் கிராமம் போன்று தத்ரூபமாக அமைக்கப்பட்ட செட்டை பார்த்து ஆச்சரியம் அடைந்தார்.சென்னையை அடுத்த ஆவடியில் தமிழ்நாடு காவல்துறை இரண்டாவது பெட்டாலியன் சார்பில் பொங்கல் கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்திற்காக தத்ரூபமாக ஒரு கிராமம் உருவாக்கப்பட்டு அதில் நாட்டு நடுதல், குடிசை வீட்டில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து வழிபாடு செய்தல், கிராமிய விளையாட்டுக்களான பல்லாங்குழி மற்றும் உரியடி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.இந்தப் பொங்கல் விழாவில் தமிழகத்தின் காவல்துறை பொறுப்பு டிஜிபி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பொங்கல் விழாவிற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிராமத்தை பார்வையிட்ட அவர், அங்கிருந்த கால்நடைகளுக்கு உணவு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். நிகழ்ச்சியின் போது பேசிய வெங்கட்ராமன், "சென்னைக்கு நடுவில் ஒரு கிராமத்தை கொண்டு வந்து வைத்தது போல, இந்த பொங்கல் விழா சிறப்பான உணர்வை ஏற்படுத்தியுள்ளது. 40 வருடங்களுக்கு முன்னர் இருந்த கிராமங்களுக்கு நேரில் வந்தது போல இருந்தது என்றும் அவர் நிகழ்ச்சியுடன் தெரிவித்தார்.
Be the first to comment