தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடிகர் யோகி பாபு தங்கத்தேர் இழுத்து வழிபாடு நடத்தினார். முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது தூத்துக்குடி மாவட்டதிலுள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இத்திருகோயில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக விளங்கி வரும் நிலையில் இங்கு தினம்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். திருவிழா நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் மேற்கொள்வார்கள். மேலும், இந்த கோயிலுக்கு அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. நடிகர் யோகி பாபு மாதம்தோறும் திருச்செந்தூர் முருகனை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்த நிலையில், இன்று திருச்செந்தூர் வந்த அவர் தங்கத்தேரை இழுத்து சாமி தரிசனம் செய்தார். முன்னதாக கோயிலில் உள்ள சிவாச்சாரியார்கள் சார்பில் அவருக்கு ரோஜா பூ மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதனையடுத்து கோயில் யானை தெய்வானையிடம் ஆசிர்வாதம் பெற்ற அவர், தங்க தேரை இழுத்து சாமி தரிசனம் செய்தார்.
Be the first to comment