தஞ்சாவூர்: ஜெர்மன் பெண்ணை தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் தமிழ் பாரம்பரிய முறைப்படி கரம்பிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தஞ்சாவூர் மாவட்டம் கூனம்பட்டி கிராமத்தை சேர்ந்த விக்னேஸ்வரனுக்கும், ஜெர்மன் நாட்டை சேர்ந்த விலினா பெர்கனுக் என்பவருக்கும் இன்று தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் ஜெர்மனியில் உள்ள ஐடி நிறுவனத்தில் 10 வருடங்களாக பணி புரிந்து வந்துள்ளனர். அப்போது நண்பர்களாக இருந்த இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.தங்களது உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல நினைத்த காதல் ஜோடி, இன்று இரு வீட்டாரின் சம்மதத்துடன் கரம் பிடித்துள்ளனர். தமிழ் முறைப்படி நடந்த இத்திருமணத்தில் மணமகள் மருதாணி வரைந்தும், பட்டுப்புடவை உடுத்தியும் தமிழ் பெண் போல வந்திருந்தது அங்கிருந்தவர்களை வெகுவாக கவர்ந்தது. பின்னர், தமிழ் முறைப்படி தாலி கட்டிய மணமகன், மணமகள் நெற்றியில் முத்தமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.பின்னர் மணமக்கள் இருவரும் இருவீட்டாரிடம் ஆசீர்வாதத்தையும், வாழ்த்துக்களையும் பெற்றுக் கொண்டனர். இதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த நபர்கள் தமிழ் பாரம்பரிய உடை அணிந்து கலந்து கொண்டனர்.
Be the first to comment