நீலகிரி: கோத்தகிரி அருகே பூனையை வேட்டையாட கேண்டீனுக்குள் புகுந்த சிறுத்தையால் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது இது குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.நீலகிரி மாவட்டம் அடர்ந்த வனங்கள் சூழ்ந்த மாவட்டமாகும். இங்கு வெள்ளை புலி, கருஞ்சிறுத்தை, வரையாடு, புலி, சிறுத்தை, காட்டெருமை, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அவ்வப்போது சர்வ சாதாரணமாக குடியிருப்புப் பகுதிக்குள் உலா வரும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், கோடநாடு அருகே உள்ள ஃபாரஸ்ட் ஹில் பகுதியில் செயல்பட்டு வரும், தனியார் எஸ்டேட் கேண்டினுக்குள் இருந்த பூனையை வேட்டையாட, சிறுத்தை கேண்டினுக்குள் புகுந்தது. அப்போது, அங்கிருந்த ஊழியர் சிறுத்தையை கண்டதும் மின்னல் வேகத்தில் அங்கிருந்து ஓட்டம் பிடித்து தப்பி ஓடினார். தொடர்ந்து, சிறுத்தை பூனையை துரத்திய நிலையில், சாமார்த்தியமாக பூனை தப்பிச் சென்றது. கேன்டீன் ஊழியரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பித்தனர். தற்போது இதுகுறித்த சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.
Be the first to comment