ஈரோடு: நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த சிறுத்தை, காவல் நாய்களை கடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பண்ணாரி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு ஆடு, மாடு வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. வனத்தை ஒட்டியுள்ள மேய்ச்சல் நிலங்களில் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில், பண்ணாரி வனத்தில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று அருகேயுள்ள பட்டமங்கலம் ஊருக்குள் புகுந்து சாலையில் நடமாடிய காட்சி அங்குள்ள விவசாய தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதில் சாலையில் நடமாடிய சிறுத்தையை கண்ட காவல் நாய்கள் குரைக்க தொடங்குகிறது. அதனை கண்ட சிறுத்தை நாய்களை கடித்து கொன்றது. வனத்தையொட்டியுள்ள கிராமங்களில் புகுந்து சிறுத்தைகள் கால்நடைகளை வேட்டையாடி வந்த நிலையில், ஊருக்குள் புகுந்து காவல் நாய்களை கடித்துக் கொன்ற சம்பவம் மக்களிடையே அதிரவலையை ஏற்படுத்தியுள்ளது. மக்களை அச்சுறுத்தும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து வேறு இடத்தில் விடுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Be the first to comment