தூத்துக்குடி: திருச்செந்தூர் கடற்கரையோரம் ஒதுங்கியுள்ள சேதமடைந்த கல் சிலைகளை அப்புறப்படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். கோயிலுக்கு வரும் பக்தர்கள் கோயில் முன்புள்ள கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்வார்கள். தற்போது கோயில் முன்புள்ள கடற்கரை பகுதியில் ஏராளமான சேதமடைந்த கற்சிலைகள் கரை ஒதுங்கியுள்ளது.குறப்பாக பாதம் சேதமடைந்த சிலைகள், தலை, முகம், சேதடைந்த சிலைகள் கரையோரம் காணப்படுகிறது. இதனால் கடலில் நீராடும் பக்தர்களுக்கு உடலில் காயம் ஏற்படும் அபாயம் உள்ளது. அதே போல் கடற்கரையில் நடந்து செல்லும் பக்தர்கள் காலில் இந்த சேதமடைந்த சிலைகள் தட்டுவதால் முதியோர்கள் மற்றும் குழந்தைகள் கீழே விழுந்து காயம் எற்படுகிறது.குறிப்பாக, வருகின்ற 22 ஆம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்க உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 27 ஆம் தேதி கோயில் கடற்கரையில் நடைபெற உள்ளது. அன்றைய தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தருவார்கள். எனவே, விழாவிற்கு முன் சேதமடைந்த சிலைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Be the first to comment