சென்னை: தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் கவிச் சக்கரவர்த்தி கம்பரின் முழு திருவுருவச் சிலையை ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார்.கிண்டியில் உள்ள தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் உள்ள கம்பர் வனம் அருகே புதிதாக நிறுவப்பட்டுள்ள கவிச் சக்கரவர்த்தி கம்பரின் முழு திருவுருவச்சிலையை ஆளுநர் ஆர்.என். ரவி திறந்து வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்வில் முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியல்வாதியுமான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள எச்.வி. ஹண்டே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும், நாமக்கல், சேலம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கம்பர் கழகத்தின் உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.அதனைத் தொடர்ந்து, கல்விக்கூடங்களில் 'கம்பன்' என்னும் தலைப்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கம்பன் குறித்தான கட்டுரை எழுதும் போட்டிகள் நடைபெற்றன. அதில் வெற்றி பெற்ற மாணவர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். கம்ப ராமாயணத்தின் காவியத்தின் அல்லயன்ஸ் பதிப்பகம் மறுபதிப்பு செய்துள்ளது. அதில் ஆளுநர் ரவி, கம்ப ராமாயணத்தின் 9 காண்டங்களையும் குறிப்பிட்டு வாழ்த்துரையின் இறுதியில் தனது கையெழுத்தை தமிழில் போட்டுள்ளார். மேலும் ராமாயணத்தை பிற இந்திய மொழிகளில் மொழி மொழிபெயர்க்க வேண்டும் எனவும் வாழ்த்துரையில் குறிப்பிட்டுள்ளார்.
Comments