திண்டுக்கல்: கொடைக்கானல் மலைப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த மான் குட்டிக்கு அடைக்கலம் கொடுத்து அரவணைத்த பசு மாட்டியின் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் 60 சதவீதத்திற்கு மேலாக வன பகுதிகள் மட்டுமே உள்ளது. இந்த வனப்பகுதியில் காட்டுயானைகள், மான், கருமந்தி, புலி, சிறுத்தை, பன்றி, செந்நாய் போன்ற விலங்குகள் வாழ்ந்து வருகிறது.இந்த நிலையில் இன்று மாலை பெருமாள் மலை சாலையோரத்தில் குட்டி மான் ஒன்று வழிமாறி சாலை ஓரத்தில் உள்ள புதரில் வழி தெரியாமல் மறைந்து நின்றது. அப்போது அவ்வழியாக தொடர்ச்சியாக வாகனங்கள் வந்து சென்ற நிலையில் சாலையோரத்தில் உள்ள புதர் பகுதியில் மிகுந்த அச்சத்தில் மான் நின்று கொண்டிருந்தது. இதை கண்ட பசுமாடு ஒன்று மான் குட்டி அருகே சென்று தன் குட்டியை போல் அரவணைத்து பாசத்துடன் தடவி கொடுத்துள்ளது. இந்த காட்சியை அப்பகுதியில் இருந்தவர்களை மெய்சிலிர்க்க வைத்தது. இதனை கண்ட அப்பகுதியினர் அதை வீடியோவாக எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Be the first to comment