Skip to playerSkip to main content
  • 5 weeks ago
தஞ்சாவூர்: கனமழை காரணமாக தஞ்சாவூரை சேர்ந்த மீனவர்கள், நாட்டுப்படகு மற்றும் விசைப்படகுககளில் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, அடுத்த 3 நாட்களுக்கு டெல்டா மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று பிற்பகல் முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக மதுக்கூர் பகுதியில் 136.40 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. கனமழை எச்சரிக்கையால், இன்று (நவ.24) தஞ்சாவூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நடவு செய்யப்பட்டுள்ள சம்பா மற்றும் தாளடி இளம் நெற்பயிர்கள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் இன்று தஞ்சாவூர் மாவட்ட நாட்டுப் படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் யாரும் (24.11.2025) இன்று முதல், மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது என மீன்வளத்துறை மற்றும் கடலோர காவல் படை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தொலைதூரக் கடல் பகுதிக்கு மீன்பிடிப்பதற்காக சென்ற மீனவர்கள், உடனே கரை திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Category

🗞
News
Transcript
00:00Oh
Be the first to comment
Add your comment

Recommended