Skip to playerSkip to main content
  • 7 months ago
வேலூர்: விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தவெக நிர்வாகிகள் சார்பில் தங்கத்தேர் இழுக்கும் வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.நடிகரும், தவெக தலைவருமான விஜய் பிறந்தநாள் இன்று (ஜூன் 22) மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் சிறப்புப் பூஜைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.இந்த நிலையில், விஜயின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, வேலூர் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழகம் சார்பில், வரலாற்றுச் சிறப்புமிக்க வேலூர் கோட்டையில் அமைந்துள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சிறப்புப் பூஜை மற்றும் வழிபாடு நேற்றிரவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, கட்சி நிர்வாகிகள் சார்பில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தனர்.வேலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வேல்முருகன் மற்றும் செயற்குழு உறுப்பினர் வினோத் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர். அப்போது, ‘விஜய் நீண்ட நலம் பெற்று வாழ வேண்டும், 2026 தேர்தலில் ஆட்சி அமைக்க வேண்டும்,’ என்று அவர்கள் வேண்டிக் கொண்டனர்.

Category

🗞
News
Transcript
00:00I don't know
00:30Oh
Comments

Recommended