சென்னை: மூன்று வயது சிறுவனை தெரு நாய் ஒன்று கொடுரமாக கடித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோயம்பேடு அடுத்து நெற்குன்றம் 148 வார்டு ஜெயராம் நகர் 2வது தெருவை சேர்ந்தவர்கள் பிரபு - மீனா தம்பதியர். இவர்களது மகனான மூன்று வயது குழந்தை முகேஷ் வீட்டின் அருகே ஜெயராம் நகர் பிரதான சாலை சந்திப்பில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்து தெருநாய் ஒன்று சிறுவனை கடித்துக் குதறியது. இதில் சிறுவனின் பிறப்புறுப்பில் காயம் ஏற்பட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, சிறுவனின் பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது சிறுவன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் நாய் பிடிக்கும் வண்டியை கொண்டு வந்து அந்த தெரு நாயை பிடித்து சென்றனர். தெருநாயை பிடிக்கும் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
Be the first to comment