Skip to playerSkip to main contentSkip to footer
  • 2 months ago
ஈரோடு: கேர்மாளம் பகுதயில் வாகனத்தை சுத்துப்போட்ட யானையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள கேர்மாளம் வனச்சரகத்தில் அதிக அளவில் யானைகள் உள்ளன. இதனால், யானைகள் உணவு தேடி அடிக்கடி சாலையை கடந்து செல்வது வழக்கமாகியுள்ளது. அண்மை காலமாக கரும்பு லாரிகளை குறிவைத்து யானைகள் சாலையோரம் காத்திருக்கின்றன. அப்போது சாலையில் செல்லும் வானத்தை வழிமறித்து உணவு உள்ளதா என தேடுவது தொடர் கதையாகி வருகிறது.  இந்நிலையில் கேர்மாளம் இருந்து காய்கறிகளை ஏற்றி கொண்டு பிக்கப் வேன் ஆசனூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது கெத்தேசால் அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை சாலையை வழிமறித்து பிக்கப் வேனில் கரும்பு உள்ளதாக நினைத்து வாகனத்தை துரத்தியது. அச்சமடைந்த வாகன ஓட்டுநர் வாகனத்தை சுமார் 1 கிலோமீட்டர் தூரத்திக்கு பின்னோக்கி இயக்கி தப்பித்தார். ஹாரன் சத்தம் காரணமாக சற்று பயந்துபோன யானை தானாக வனப்பகுதிக்குள் சென்றது. வாகனத்தை தூரத்திய யனையால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் 2 கிலோமீட்டர் தூரத்துக்கு முன்பாகவே வாகனங்களை நிறுத்தி காத்திருந்தனர். யானை காட்டுக்குள் சென்றதை உறுதிபடுத்திய பின்னரே அந்த வழியாக வாகனங்களை இயக்கினர்.

Category

🗞
News
Be the first to comment
Add your comment

Recommended