Skip to playerSkip to main content
  • 6 weeks ago
மயிலாடுதுறை: கனமழை காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.'டிட்வா' புயலால் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.குறிப்பாக, தரங்கம்பாடி அருகே காழியப்பநல்லூர் ஊராட்சியில் உள்ள ரெத்திரம் நகர், அம்பேத்கர்நகர், புதுத்தெரு பகுதிகளில் உள்ள குடியிருப்புப் பகுதிகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால், அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். மேலும், வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை, அப்பகுதி பெண்கள் பாத்திரத்தால் வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.முழங்கால் அளவிற்கு தண்ணீர் சூழ்ந்திருப்பதால், மக்கள் வீடுகளை விட்டும் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, பாம்பு போன்ற விஷ ஜந்துகள் வீட்டுக்குள் வருவதாகவும், கழிவுநீர் மழை நீருடன் கலப்பதால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.மேலும், அப்பகுதியில் உள்ள வடிகால் வாய்க்கால்கள் பராமரிப்பு இன்றி கிடப்பதாலேயே, தண்ணீர் வடிய வழியில்லாமல் மழைநீர் வீடுகளை சூழ்ந்துள்ளதாகவும், கடந்த 5 ஆண்டுகளாகவே இதேநிலை தான் ஏற்படுவதாகவும், பலமுறை கோரிக்கை வைத்தும் ஊராட்சி நிர்வாகத்தினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

Category

🗞
News
Be the first to comment
Add your comment

Recommended