ஈரோடு: சாலையோர வனப் பகுதியில் நடமாடிய புலியை காரில் சென்ற பயணிகள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டது வைரலாகி வருகிறது.சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பவானிசாகர் வனப்பகுதி வழியாக அமைந்துள்ள மண் சாலையில் தெங்குரமஹாடா வன கிராமத்திற்கு செல்வதற்காக காரில் பயணிகள் சென்று கொண்டிருந்த போது சாலையோர வனப்பகுதியில் புலி ஒன்று நடமாடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.அப்போது வாகனத்தில் இருந்த பயணிகள் செல்போனில் புலி நடமாடும் காட்சியை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். வாகனம் அருகே வருவதை கண்ட புலி மெதுவாக நடந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. தற்போது புலி நடமாடும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இது குறித்து வனத்துறையினரிடம் கேட்டபோது புலி நடமாட்டத்தை வீடியோ எடுத்த நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்தனர்.கிழக்கு மேற்கு தொடர்ச்சி மலைகளில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்க்கு உட்பட்ட தலமலை, பெஜலட்டி, தெங்குமரஹாடா, கேர்மாளம் ஆகிய வனப்பகுதியில் மனித இடையூறு இல்லாத நீர் நிலைகள் கொண்ட அடர்ந்த காட்டுப்பகுதியில் புலிகள் வசிக்கின்றன. அதிக பரப்பளவுகொண்ட இந்த புலிகள் காப்பகத்தில் 150 புலிகள் வாழ்வதற்கேற்ற சூழல் உள்ளதாகவும் தற்போது 95 புலிகள் உள்ளதாக வனத் துறையினர் தெரிவித்தனர்.
Be the first to comment