தஞ்சாவூர்: ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு ஐஸ்கிரீம், மற்றும் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கி தஞ்சாவூர் போக்குவரத்து போலீசார் நூதன முறையில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.தமிழகத்தில் இரு சக்கர வாகனம் ஓட்டும் போது வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து தஞ்சாவூரில் இரு சக்கர வாகன ஓட்டிகள் 100 சதவீதம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி போக்குவரத்து போலீசார், தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் தஞ்சாவூர் ஆற்றுப்பாலம் அருகில் போலீசார் இன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர், அப்போது ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதித்தும், அறிவுரையும் கூறி அனுப்பி வைத்தனர். பின்னர் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் போக்குவரத்து காவல் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஜூஸ், ஐஸ்கிரீம் மற்றும் ஒரு லிட்டர் பெட்ரோல் ஆகியவற்றை வழங்கினர்.ஹெல்மெட் போடாதவர்களுக்கு கேஸ் போட்டு வழக்கமாகி விட்டது, அதனால ஹெல்மெட் போட்டு வந்த உங்களுக்கு ஐஸ்கிரீம் தரோம் கூலா சாப்பிட்டு விட்டு இலவசமா ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டுட்டு போங்கனு கூறி ஐஸ்கிரீம் கொடுத்தனர். இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Be the first to comment