ஈரோடு: கோபியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டில் இபிஎஸ் படம் அகற்றப்பட்டு அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ள புதிய பிளக்ஸ் போர்ட் வைக்கப்பட்டுள்ளது.அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று நீக்கப்பட்ட நிலையில், அவரது அலுவலகத்தின் முன்பு ஈபிஎஸ் படத்துடன் இருந்த பிளக்ஸ் போர்டு நீக்கப்பட்டுள்ளது. நேற்று தனது நீக்கம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து செங்கோட்டையன் விளக்கம் அளிக்கும் முன்பு, பிளக்ஸ் போர்டில் இருந்த இபிஎஸ் படத்தின் மீது ஜெயலலிதா புகைப்படம் ஒட்டப்பட்டது. இந்நிலையில், தற்போது அந்த பழைய பிளக்ஸ் போர்ட் அகற்றப்பட்டு புதிய பிளக்ஸ் வைக்கப்பட்டுள்ளது. புதிய படத்தில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரின் படங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும், நேற்று வைத்திருந்த பிளக்ஸ் போர்டில் அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அலுவலகம் என்ற வாசகங்கள் இருந்த நிலையில், தற்போது புதிதாக வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Be the first to comment