சென்னை: சைதாப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவிகள் கிராமிய முறைப்படி அடுப்பில் பொங்கல் வைத்து, நடனமாடி மகிழ்ந்தனர்.தமிழர்கள் திருநாளான பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் நாள் கொண்டாடப்படுகிறது. போகி, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என நான்கு நாட்கள் இந்த பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படும். இந்த வருடம் பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 14 ஆம் தேதி முதல் ஜனவரி 17 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு சைதாப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவிகள் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து கொண்டாடினர். மேலும் தமிழர்கள் கலையான தப்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், காவடி ஆட்டம், கரகாட்டம், கும்மி ஆட்டம் போன்றவற்றை மாணவிகள் ஆடினர். இதனால் மகிழ்ச்சி அடைந்த பிற மாணவிகளும் ஆர்வமுடன் நடனம் ஆடினர். அதன் பின்னர் மாணவிகள் கண்ணை கட்டிக்கொண்டு உறியடி நடத்தினர். அதே போல் மாணவிகள் தமிழர்களின் பாரம்பரிய உணவுகளை கொண்டு கடைகளும் அமைத்திருந்தனர்.
Be the first to comment