திண்டுக்கல்: இரண்டு நாள் சுற்றுப்பயணமாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திண்டுக்கலுக்கு வருகை தந்துள்ளார். நேற்று அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். பின்னர் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்திலும் கலந்து கொண்டு பேசினார்.அதனைத் தொடர்ந்து, இரவு தனியார் விடுதியில் தங்கியிருந்த துணை முதலமைச்சர் இன்று காலை திண்டுக்கல் நகரப் பகுதியான ஆர் எம் காலனி, நேருஜி நகர், திருச்சி ரோடு, பழனி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சாலை ஓரத்தில் நடைபயிற்சி மேற்கொண்டார். அவருடன் செந்தில்குமார் எம்.எல்.ஏ.வும் நடைபயிற்சி சென்றார்.மேலும், அங்கு இருந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு சென்ற கூலித் தொழிலாளர்கள் ஆகியோருக்கு வணக்கம் தெரிவித்தார். மேலும், பொதுமக்களை சந்தித்து பேசியதோடு பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் அவருடன் செல்பி புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியோடு சென்றனர்.
Be the first to comment