தஞ்சாவூர்: தீபாவளி பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு தஞ்சையில் சாலையோர கடைகளில் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. தஞ்சையில் தீபாவளி விற்பனை களைகட்டி உள்ளதால் சாலைகள் முழுவதும் மனித தலைகளாக காட்சி அளிக்கிறது. தஞ்சை காந்திஜி சாலை, அண்ணா சாலை, பழைய பேருந்து நிலையம் ஆகிய சாலைகளில் ஆயத்த ஆடைகள், பெண்களுக்கான தோடு, வளையல், நகைகள், சிறுவர், சிறுமிகளுக்கான சட்டை, இனிப்புகள், பட்டாசுகள் என அனைத்து விதமான பொருட்களும் விற்கப்படுகிறது.இதையடுத்து தீபாவளிக்கு தேவையான பொருட்கள் வாங்க தஞ்சை சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து குடும்பத்துடன் சாரை சாரையாக மக்கள் வெள்ளம் போல் குவிந்து வருகின்றனர்.தஞ்சாவூரில் சாலைகள் முழுவதும் மனித தலைகளால் நிரம்பி உள்ளது. மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் தீயணைப்பு துறையினர் தயார் நிலையிலும் உள்ளனர்.
Be the first to comment