விழுப்புரம்: நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ள குழந்தைகள் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.இந்துக்களில் புனித பண்டிகையில் ஒன்றான தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகையை ஒட்டி மூன்று நாட்கள் அரசு விடுமுறை என்பதால், பொதுமக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளி பண்டிகை கொண்டாடி வருகின்றன. இந்நிலையில், குடும்பத்துடன் கொண்டாடி மகிழும் தீபாவளி பண்டிகை என்பது, ஆதரவற்றோர் மற்றும் கைவிடப்பட்டோருக்கு ஒவ்வொரு ஆண்டும் கனவாகவே இருக்கும். ஆனால், அதனை போக்கும் வகையில், இன்று விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர்-மாம்பழப்பட்டு ரோடு பகுதியில் அமைந்துள்ள தன்வந்திரி காப்பக மையத்தில் தீபாவளி பண்டிகை மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதே போன்று கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த வெள்ளையனூர் கிராமத்தில் அமைந்துள்ள அரசு மனநல காப்பகத்திலும், தீபாவளி பண்டிகை மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அங்கிருந்த குழந்தைகள் உற்சாகமாக நடனமாடியும், பட்டாசுகளை கொளுத்தியும் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர்.
Be the first to comment