நீலகிரி: குன்னூர் ராணுவ பயிற்சி மையத்தில் அக்னி வீரர்கள் பயிற்சி முடித்து அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். குன்னூர் அருகே வெலிங்டனில் இந்திய ராணுவத்தின் பழமையான மற்றும் மிகவும் சிறப்பு வாய்ந்த காலாட்படையின் மெட்ராஸ் ரெஜிமென்ட் மையம் உள்ளது. இந்த ராணுவ பயிற்சி முகாமில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவ பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.இவர்களுக்கு நவீன ரக துப்பாக்கிச் சுடும் பயிற்சி, நவீன ஆயுதங்களை கையாளும் பயிற்சி, மலையேற்ற பயிற்சி, பேரிடர் மீட்பு பயிற்சி, போர் பயிற்சி ஆகியவை வழங்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் பயிற்சி பெறும் வீரர்கள் நம் நாட்டின் பல இடங்களுக்கும் பணிபுரிய அனுப்பப்படுகின்றனர். இந்த பயிற்சி பெறும் ராணுவ வீரர்கள், பல்வேறு கால சூழ்நிலைகளில் திறமையுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.தற்போது அக்னி வீரர்கள் 31 வார பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்யும் தருவாயில், நிறைவு பயிற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வெலிங்டன் பேரக்ஸ் ஸ்ரீ நாகேஷ் சதுக்கத்தில் சத்தியப் பிரமாண நிகழ்ச்சி நடைபெறுவதற்கான பயிற்சி நடைபெற்று வருகிறது. இதன் கழுகு பார்வை காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.
Be the first to comment