தூத்துக்குடி: விலங்குகள் நல ஆர்வலர்களுக்கு எதிராக கடும் விமர்சனத்தை முன் வைத்து பிரபல யூடியூபர் ஜி.பி.முத்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவில் அதிக அளவில் நாய்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினந்தோறும் ஏராளமான இடங்களில் நாய்கள் கடித்து பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை காயமடைந்து அதன் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி வருகின்றன.இதன் காரணமாக உச்ச நீதிமன்றம் தெரு நாய்களை பிடித்து காப்பகத்தில் அடைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமான திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி பகுதியைச் சேர்ந்த ஜி.பி.முத்து, விலங்குகள் நல ஆர்வலர்களுக்கு எதிராக கடும் விமர்சனத்தை முன் வைத்து யூடியூபில் வீடியோ பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், "எத்தனை பிள்ளைகளை நாய்கள் கடிக்குது தெரியுமா? உங்க பிள்ளைங்கள நாய் கடிச்சு கொதறி அந்த பிள்ளைகளுக்கு ரேபிஸ் நோய் வந்தா அப்போ தான் உங்களுக்கு நெஞ்சு வலிக்கும். இந்தா பாருங்க என்னோட பையனோட கன்னத்தை நாய் கடிச்சு கொதறி வச்சிருக்கு. பிள்ளைகளுக்கு ஒன்று என்றால் பெத்தவங்களுக்கு தான் தெரியும் வலி. இந்த மாதிரி பிள்ளைகளுக்கு ஆச்சுன்னா யாரு பாப்பா. உங்களுக்கு நாய் வளர்க்கணும்னு ஆசைப்பட்டால் புதுசா வீடு கட்டுங்க. நல்ல பெரிய காம்பவுண்ட் கட்டி அந்த காம்பவுண்டுக்குள்ள நாய் தெரு நாய் எல்லாத்தையும் போட்டு வளருங்கள். பிள்ளைகளுக்கு ஒன்று என்றால் நம்ம நெஞ்சு தாங்காது. தினமும் எத்தனை பேரை துரத்துது எத்தனை பிள்ளைகளை கடிக்குது" என்று பேசி பதிவேற்றம் செய்துள்ளார்.
Be the first to comment