திருவாரூர்: தனது எஜமான் குடும்பத்தை காப்பாற்ற இரண்டு மணி நேரமாக பாம்புடன் போராடிய நாய்களின் வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த ஜாம்புவானோடை வடகாடு கிராமத்தை சேர்ந்தவர் வேதரெத்தினம். இவரது வீட்டுக்கு நேற்று மதியம் சுமார் 5 அடி நீளத்தில் ஒரு நல்லபாம்பு வந்தது. இதனை கண்ட வேதரெத்தினம் வளர்க்கும் இரண்டு நாய்களும் அந்த பாம்பை பார்த்தவுடன் குறைத்து விரட்டின. இருப்பினும் அந்த பாம்பு வீட்டுக்குள் புகுந்து விட வேண்டும் என திட்டவிட்டமாக படமெடுத்து நாய்களை சீண்டியது. இதனால் நாய்களுக்கும் அந்த பாம்புக்கும் இடையே சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நடைபெற்றது.இந்த நாய்கள் குறைக்கும் சத்தத்தை கேட்டு வெளியே வந்த வேதரெத்தினம் மற்றும் அவரது குடும்பத்தினர், அந்த காட்சிகளை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து வேதரெத்தினமும் அவரது குடும்பத்தினரும் அந்த பாம்பை விரட்டி விட முயற்சித்தனர். ஆனாலும் அது போகவில்லை. அவர்களையும் கண்டு சீறியது. கடைசியில் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற நாய்கள் அந்த பாம்பை கடித்து குதறி கொன்றன.
Be the first to comment