Skip to playerSkip to main content
  • 3 months ago
திருநெல்வேலி: ஸ்வீட் கடையில் மணிபர்ஸை  திருடும் மர்ம நபர் குறித்த சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள ஸ்வீட் கடை ஒன்றில் நேற்று முன்தினம் இரவு நெல்லையை சேர்ந்த இசக்கி என்பவர் ஸ்வீட் வாங்க வந்துள்ளார். அப்போது ஸ்வீட் பொருட்களை வாங்கிவிட்டு கடைக்காரரிடம் பணத்தை கொடுத்துவிட்டு தன்னுடைய மணி பர்ஸை ஞாபக மறதியில் பேக்கரி வைத்துவிட்டு சென்றுள்ளார்.  இதைத்தொடர்ந்து பேக்கரிக்கு வந்த மஞ்சள் உடை அணிந்துவந்த மர்ம நபர் ஒருவர் பொருட்கள் வாங்குவது போன்று அங்கும் இங்கும் சுற்றித் திரிந்துள்ளார். தொடர்ந்து மணி பர்ஸ் இருந்த இடத்தின் அருகே வந்து தன்னுடைய பேக்கை எடுத்து அதில் இருக்கும் பொருட்களை சரி பார்ப்பது போன்று அருகிலிருந்த இசக்கியின் மணி பர்ஸை தான் கொண்டு வந்த பேக்கில் யாருக்கும் தெரியாமல் எடுத்துள்ளார்.இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவியில் பதிவானது. இந்த வீடியோ வெளியாகி சமூக வலைதளத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது. அதில் அந்த மர்ம நபர் தோளில் பேக் அணிந்தபடி அங்குமிங்கும் நடமாடுகிறார். பின்னர் தனது பேக்கில் இருந்து தண்ணீர் பாட்டில் எடுப்பது போன்று எடுத்துவிட்டு அப்படியே நைசாக மணி பர்சை எடுத்து பேக்கில் வைக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளனர்.அதே சமயம் இது குறித்து பாதிக்கப்பட்ட இசக்கி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை. இருப்பினும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Category

🗞
News
Be the first to comment
Add your comment

Recommended