சென்னை: ஆவடி அருகே தெரு நாய்களுக்கு உணவு வைத்த மூதாட்டியை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.ஆவடி கோயில்பதாகை அசோக் நகர் கிருஷ்ணமூர்த்தி தெருவை சேர்ந்த சாந்தி (76). இவர் மகன் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில், மூதாட்டி சாந்தி வீட்டின் அருகே நாய்களுக்கு உணவு வைத்துக் கொண்டிருந்தார். அதே தெருவில் வசிக்கும் பாலமுருகன் (48) தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அவ்வழியே செல்லும் போது மூதாட்டி உணவு வைப்பதை பார்த்து திடீரென அவர் அணிந்திருந்த ஹெல்மெட் எடுத்து மூதாட்டியை தாக்க துவங்கினார்.மூதாட்டி தலையில் தாக்கியதில் அவர் கீழே விழுந்துள்ளார். இதை தடுக்க வந்த பக்கத்து வீட்டு பெண்மணியை தள்ளி விட்டு மீண்டும் மூதாட்டியை தாக்கியுள்ளார். இது தொடர்பாக ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் புகார் அளித்ததை எடுத்து வழக்குப்பதிவு செய்து பாலமுருகனிடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதற்கிடையே பாலமுருகன் ஹெல்மெட்டால் மூதாட்டியை தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அதில் இருசக்கர வாகனத்தில் வந்த பாலமுருகன் திடீரென தான் அணிந்திருந்த ஹெல்மெட்டால் மூதாட்டி தலையில் தாக்குவது பதிவாகி இருந்தது. இச்சம்பவம் குறித்து பாட்டியின் பேரன் கூறுகையில், "எனது பாட்டி வீட்டின் அருகே உள்ள துளசி செடியை பிரிப்பதற்காக சென்றனர். அப்போது அங்கு வந்த நபர் பாட்டி மீது ஹெல்மெட்டால் தாக்கி விட்டு தகாத வார்த்தையில் பேசி திட்டி உள்ளார். தட்டி கேட்ட வீட்டின் உரிமையாளரையும் தள்ளிவிட்டு பாட்டியை மீண்டும் தாக்கி விட்டு சென்று விட்டார். இவர் தொடர்ச்சியாக இது போன்ற செயலில் ஈடுபட்டு வருகிறார்" என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
Be the first to comment