Skip to playerSkip to main content
  • 3 months ago
தேனி: பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கைலாசநாதர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது மகனுடன் பங்கேற்றார்.தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் மலை மேல் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கைலாசநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் இந்த திருக்கோயிலின் கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 29 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக கோயில் புனரமைப்பு பணிகள் மற்றும் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று கோயில் வளாகத்தில் முகூர்த்தக்கால் கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். முன்னதாக கைலாசநாதருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டதை தொடர்ந்து முகூர்த்த கம்பத்திற்கு நவதானியங்கள் கட்டி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பஞ்ச கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.  மேலும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ஜெயபிரதீப் ஆகியோர் சிவாச்சாரிகளுடன் இணைந்து முகூர்த்தக்கால் கம்பத்தை சுமந்து சென்று கோயில் வளாகத்தில் கம்பம் நடப்பட்டு பூஜைகள் செய்தனர். திருப்பணிகள் குறித்து சிவாச்சாரியார்கள் மற்றும் கோயில் நிர்வாகிகளிடம் ஓ.பன்னீர்செல்வம் கேட்டறிந்தார்.

Category

🗞
News
Transcript
00:00This is a production of the U.S. Department of Health and Human Services.
00:30All right, let's go.
01:00All right.
01:30All right.
Be the first to comment
Add your comment

Recommended