கோயம்புத்தூர்: 'ஜனநாயகன்' திரைப்படம் வெளியாவதில் தாமதமானதால் 'தலைவர் தம்பி தலைமையில்' திரைப்படத்திற்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது என நடிகர் ஜீவா கூறியுள்ளார்.நித்திஷ் சகாதேவ் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் பொங்கல் தினத்தன்று வெளியான 'தலைவர் தம்பி தலைமையில்' (TTT) திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இத்திரைப்படம் பொள்ளாச்சியில் ஒரு திரையரங்கில் திரையிடப்பட்டுள்ளது. படத்திற்கு ரசிகர்கள் அளித்து வரும் வரவேற்பைப் பார்ப்பதற்காக திரைப்படத்தின் கதாநாயகன் ஜீவா, கதாநாயகி திவ்யபாரதி, இயக்குநர் நிதிஷ் சகாதேவ் உள்ளிட்ட திரைப்படக் குழுவினர் திரையரங்கிற்கு வருகை தந்தனர். அப்போது, ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தும் அவர்களை சூழ்ந்து கொண்டு செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.அப்போது, நடிகர் ஜீவா கூறுகையில், "TTT திரைப்படம் தமிழகம் முழுவதும் ரசிகர்கள் மற்றும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படம் பொங்கலுக்கு நல்ல ட்ரீட்டாக உள்ளது. தமிழக மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப் படம் ஜனவரி 30 ஆம் தேதி தான் ரிலீஸ் செய்ய இருந்தது. 'ஜனநாயகன்' படம் வெளியாவதில் தாமதமானதால் இத்திரைப்படத்திற்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்தது. பொள்ளாச்சி சினிமாவிற்கு உகந்த இடம் பெரும்பாலும் "சூப்பர் குட் பிலிம்ஸ்" திரைப்படங்கள் பொள்ளாச்சியில் தான் படப்பிடிப்பு நடைபெறும்" என தெரிவித்தார்.
Be the first to comment