திண்டுக்கல்: பழனியில் மது பாட்டிலுடன் ஆம்னி பேருந்தை வழி மறித்த இளைஞரின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு பழனியாண்டவர் கல்லூரி அருகே பொள்ளாச்சியிலிருந்து சென்னை நோக்கி ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென சாலையின் நடுவே கையில் மது பாட்டிலுடன் ஒரு இளைஞர் பேருந்தின் குறுக்கே பாய்ந்து நின்று வழிமறித்தார். இதனால் பேருந்து ஓட்டுநர் உடனடியாக சுதாரித்து பிரேக் அடித்துள்ளார். பேருந்து சில அடிகளில் நின்று போனதால், பயணிகள் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் தப்பினர். பேருந்தில் பயணித்த பயணிகள் பீதியடைந்தனர். இச் சம்பவம் அப் பகுதியில் இருந்தவர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து பழனி போலீசார் விரைந்து வந்து இளைஞரை பிடித்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். தற்போது இந்த சம்பவத்தின் கண்காணிப்பு கேமிரா காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Be the first to comment