திண்டுக்கல்: தொடர் விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தலங்களில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் நண்பர்களுடன் மற்றும் குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அமைந்துள்ள மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை விடுமுறை நாட்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் தொடர்ச்சியாக மிலாடி நபி மற்றும் ஓணம் விடுமுறையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்து உள்ளனர். மேலும் கொடைக்கானலில் அமைந்துள்ள கால நிலைகளை அனுபவிப்பதற்காகவும், இயற்கை சூழலை ரசிப்பதற்காகவும் கொடைக்கானல் முக்கிய சுற்றுலா தலங்களான தூண் பாறை, குணா குகை, பைன் மர காடுகள், போயர் சதுக்கம், நட்சத்திர ஏரி போன்ற இடங்களில் அதிகளவு சுற்றுலாப் பயணிகள் காணப்படுகின்றனர். மேலும் மையப் பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி மற்றும் சைக்கிள் சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்து வருகின்றனர்.
Be the first to comment