சென்னை: ஆவடியில் பிரம்மாண்டமாக நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் அமைச்சர் ஆவடி நாசர் பங்கேற்று விழாவை சிறப்பித்தார்.தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றான பொங்கல் பண்டிகை தை 1-ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையை அடுத்த ஆவடியில் மாநகராட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆவடி எம்எல்ஏவும், அமைச்சருமான நாசர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கிராமத்து பாணியில் மண் பானையில் கரும்புடன் பொங்கல் வைக்கப்பட்டது. மேலும், விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அனைத்து வகையான காய்கறிகள் மற்றும் பழங்களை வைத்தும் பொங்கலை கொண்டாடினர். அதுமட்டுமின்றி, அறுவடைக்கு தயாராக இருக்கும் கரும்பு மற்றும் நெல் வயல் நிலங்களை தத்ரூபமாக அமைத்து காண்போரை ஆச்சரியப்பட வைத்தனர். அமைச்சர் நாசரும், ஆட்சியர் பிரதாப்பும் விவசாயிகளைப் போல கதிரடித்து உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
Be the first to comment